இப்படிக்கு "அன்புடன் ...."அலட்சியப் படுத்துகிறீர்கள்

"அடச்சே!" என்கிறீர்கள்

அடடே என்கிறீர்கள்

அப்படியா? என ஆச்சர்யப்படுகிறீர்கள்

இனி "அட! ஆமாம்!" என்பீர்கள்

அப்புறம் "ஆஹா..!" என்பீர்கள்

"அப்படிப் போடு" எனப் பாராட்டுவீர்கள்

பிறகு சிம்மாசனம் கொடுப்பீர்கள்

அப்பொழுது நான் அக்கடிதத்தை

இப்படிக்கு "அன்புடன் ....

என முடிக்கும் முன்

மறந்து போவீர்கள்; மீண்டும் அலட்சியப் படுத்துவீர்கள்

உங்களுக்கு மறதி ஜாஸ்தி

இங்கே வெயில் ஜாஸ்தி

Comments

Post a Comment