அதன் ரகசியத்தை யாரறிவார்?
கோடுகளும் வளையங்களும் விளையாடியபடி
சாய்வுகளும் நேர்களும் கலந்து
அங்க அசைவுகளை உணர்த்திக்கொண்டு
நாட்களை வருஷங்களாக்கி
யுகங்களாக்கி , காலத்தை மிதித்தபடி
சில வண்ணங்கள் சேர்த்து
நெளிந்து ஓடுகிறது.
ஐன்ஸ்டீனுக்கு விளங்க மறுத்து
நடு இரவில் விழிக்க வைத்து
வெறுமையை பிரகடனப்படுத்திக் கொண்டு
நிகழ் காலத்தை நகர்த்துகிறது
கனவில் வரும் அந்த
அரூப மெல்லிய குழப்பங்களின் ரகசியம்
காலத்தின் ரகசியம் அறிவிப்பவன் பூசாரி
எனில்
அதன் ரகசியம் அறிந்தவன் கடவுள்
நான் ஒரு கவி ஆர்வலனாக மட்டுமல்லாமல் ஒரு இயற்பியல் ஆசிரியனாகவும் இருப்பதால் இன்னும் அதிகமாய் இக்கவிதையை ருசிக்க முடிந்தது. வாழ்த்துக்கள் ஆத்மா.
ReplyDeleteதங்களின் பெயர் தேர்வும் அதற்கு நீங்கள் அளித்துள்ள விளக்கமும்(அறிமுகத்தில்)கவனம் ஈர்க்கின்றன.
@@காலத்தின் ரகசியம் அறிவிப்பவன் பூசாரி
ReplyDeleteஎனில்
அதன் ரகசியம் அறிந்தவன் கடவுள்.//
Beautifull dude..! :)
good poem and a deep thought.. wishes
ReplyDeleteillusionic poem;
ReplyDeletedo write more poems....u poems are really fantastic...
ReplyDeleteit is a great initiative and heart-touched words. excellent.
ReplyDeleteநன்றி
ReplyDeleteவருணன்...
மதி...
ஆரோக்கியா...
வெளியூர்காரன்
பட்டாபட்டி
செந்தில்
மற்றும் சிவா!
Great..
ReplyDelete