அந்தக் கோடைக்காலத்தை நினைவிருக்கிறதா!
மரங்களடர்ந்த சாலையில் யாரும் காணாத பின்மதியத்தில்
கைகள் பிணைத்து நடக்கையில் ஸ்னேகம் நனைத்த பொழுதுகள்
வெயிலுணர்த்திய நிழலும்
நிழல் கொடுத்த சுகமும்
சுகம் கொடுத்த அவஸ்தைகளுமாய்
பூமி மறந்த பொழுதுகள்
உன் கண்ணில் விழுந்த தூசியை
ஊதிக் கலைத்தபின் நிலம் விழுந்த கண்ணீரை
கையில் ஏந்திய பொழுதுகள்
நம் தாகம் தணித்த அந்த தர்பூசணி விதைகளை
உன்னையறியாமல் பத்திரப்படுத்திய அந்த ஸ்வர்ணப் பொழுதுகள்
இட்லி சுட்டு இஸ்திரி போட்டு என்னை வழியனுப்பி
என் ஜீவன் ரட்சித்து
கொஞ்சமே கொஞ்சமாக உனக்காக வாழும் என் முன்னாள் காதலி!-உனக்கு
அந்தக் கோடைக்காலத்தை நினைவிருக்கிறதா!
*************************************************************************************
//இட்லி சுட்டு இஸ்திரி போட்டு என்னை வழியனுப்பி
ReplyDeleteஎன் ஜீவன் ரட்சித்து//
இப்ப அவங்க உங்க மனைவியா?
நல்ல கவிதை
//////நிழல் கொடுத்த சுகமும்
ReplyDeleteசுகம் கொடுத்த அவஸ்தைகளுமாய்/////
ம்ம் ரசித்து எழுதி இருக்கிறீர்கள் என்பது நன்றாகத்தெரிகிறது
இன்னும் கல்யாணமாகாத ஒரு கன்னிப்பையனின் வெறும் கற்பனை மட்டுமே இது கே.ஆர்.பி!
ReplyDeleteஎலேய் நான் மட்டும் உன் முன்னாள் காதலியோட இந்நாள் புருஷனா இருந்திருந்தேன்...தக்காளி நீ செத்தடி..!
ReplyDelete(என்னமா ரசிக்கிறான்...எனக்கே வைத்தேரிச்சலா இருக்கு...! ) :)
ரெட்ட,கவிதை சூப்பர் ....
ReplyDelete//நம் தாகம் தணித்த அந்த தர்பூசணி விதைகளை
உன்னையறியாமல் பத்திரப்படுத்திய அந்த ஸ்வர்ணப் பொழுதுகள்//
எல்லாக் காதல்லையும் இந்த மாதிரி ஒரு சுகமான கிறுக்குத்தனம் இருக்கவே செய்யும்.. :)
//இட்லி சுட்டு இஸ்திரி போட்டு என்னை வழியனுப்பி
என் ஜீவன் ரட்சித்து
கொஞ்சமே கொஞ்சமாக உனக்காக வாழும் என் முன்னாள் காதலி!//
வாவ்...
//கொஞ்சமே கொஞ்சமாக உனக்காக வாழும் என் முன்னாள் காதலி!//
இது எனக்கு பிடிச்சது... :)
அப்புறம்,template நல்லா இருக்கு...
This comment has been removed by the author.
ReplyDeletevery nice...
ReplyDelete