விவஸ்தையற்ற மழைஅவர்கள் சலனமற்றவர்கள்

மெதுவாக சிரிக்கிறவர்கள்

அவர்கள் பொறுப்பானவர்கள்

நேரத்துக்கு சாப்பிடுகிறவர்கள்

அவர்கள் எடுத்த பொருளை

எடுத்த இடத்தில் வைக்கிறவர்கள்

அவர்கள் நாகரீகமானவர்கள்

வீட்டில் மட்டுமே

தேநீர் அருந்துவார்கள்

அவர்கள் விவரமானவர்கள்

நாளிதழின் தலையங்கத்தை வாசிப்பவர்கள்

அவர்கள் உத்தமர்கள்

லஞ்சத்தை அன்பளிப்பென்பார்கள்

அவர்கள் பரோபகாரர்கள்

பிச்சைக்காரனுக்குப் பெரிய நாணயமிடுவார்கள்

அவர்கள் யோக்கியர்கள்

அவ்வப்பொழுது லேசாக அருந்துவார்கள்

அவர்கள் மழையைத் தூற்றுபவர்கள்

இருப்பினும் எனக்காகவும்

உங்களுக்காகவும் , முக்கியமாக

அவர்களுக்காகவும்

கொட்டித் தீர்க்கிறது மழை!

*************************************************************************************

Comments

  1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete

Post a Comment