சிறுநகரக் காதல்கள்


மதுரை திருச்சி நெடுஞ்சாலையில்

பிரிந்து செல்லும் ஒரு கிளைச்சாலையில்

மூன்று கிலோ மீட்டர் தள்ளி

ஒரு மரத்தினடியில்

உலகையே வென்ற மமதையில்

ஒரு வாரம் துவைக்காத ஜீன்ஸ் பேண்ட் மஜ்னுவும்

சிவப்பு சுடிதார் போட்ட லைலாவும்

காதல் பண்ணிக்கொண்டிருந்தார்கள்

எதிர்காலம் பற்றிய பயத்தைப் புறந்தள்ளிவிட்டு

யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தோடு...
************************************************************************************

Comments