கனவின் எதிர்திசை


கனவின் எதிர்த்திசையில் நீந்துகிறேன்

காற்புள்ளிகளின் ஓலம்

ஆங்காரத்தின் மொழி

விரும்பி நனையும் தவளைகள்

கட்டுமரத்தின் சப்தம்

முட்டியை மடக்கும் யானைகள்

சிறகு விரிக்கும் வௌவால்கள்

அடங்க மறுக்கும் எந்திரங்கள்

கலவி முடிந்த முன்னதிகாலைகள்

நொறுங்கி வீழும் எரிகற்கள்

மரணம் மறுஜென்மம் சித்திரகுப்த கணக்குகள்

பூஜை புனஸ்காரம் இத்யாதிகள்

எல்லாமும் நடந்தேறி விடுகின்றன கனவில்

கனவோடு ஒட்டி வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கம்

மறுத்து எதிர்த்தால் விடியல் துக்கம் !

************************************************************************************

Comments