ப்ரியம் உணரும் தருணம்


கொட்டித் தீர்த்த மழை

அரை நிர்வாண நிலா

சற்றுமுன் கடந்த ரயில்

அடர் மரங்களின் நிழல்கள்

கவிதைக்காய் தீர்த்த மை

உடைந்த கனவின் சிதிலங்கள்

பின்னிரவுப் பனி

நின்றபடி நகரும் மின்சாரம்

அப்பொழுதே துடைத்த வியர்வை

இறுதி ஊர்வலத்தில் உதிர்ந்த ரோஜா

கழுவப்படாத காலிக் கோப்பைகள்

அடித்து ஓய்ந்த தொலைபேசி

கனவில் வதைக்கும் ராக்ஷஸி!

பரிகசித்த வெறுமைகள்

அத்தனையும்

நாம் ப்ரியங்களை உணர்ந்த தருணங்கள்!

************************************************************************************

Comments