அயோத்தி-உடையப் போகும் நகரம்







இந்தப் பின்னிரவுப் பொழுதில் வியர்க்கிறது

மரணத்தின் பரிவர்த்தனைகளைப் போல

நொறுங்கப் போகும் ஜன்னல் கம்பிகளின் சப்தம்

எல்லாமும் உடையப் போகின்றன

கடிகாரத்தின் வழியே சரித்திரத்தின் நுரைகள்

வேகமாக ஓடும் சிறுவன்

அவசரமாய் தாழிடப்படும் வாசல்கள்

ஒரு கோவில் திறப்பதற்காக

மூடப்படும் ஒரு கோடி கல்விச்சாலைகள்

தூரத்தே கேட்கும் சைரன்கள்

இனி உருவ பொம்மைகள் எரியும்

சட்டத்தின் நகல்கள் கிழியும்

இடுகாடுகளும் டெலிவிஷன் கேமராக்களும் தயாராகின்றன

பாராளுமன்றம் ஸ்தம்பிக்கும்

எல்லைக்கோட்டில் வெப்பம் தகிக்கும்

சிறையறைகள் நிரம்பும்

உபதெய்வங்களுக்கு உத்வேகம் வரும்

அரசியல் செய்ய அற்புதமான தருணம்

முழுமுதற் கடவுளே

பூகம்பம் வந்து இந்த அயோத்தி

பூமிக்குள் புதைந்தால் என்ன?

இந்தப் பின்னிரவுப் பொழுதிலும் எனக்கு வியர்க்கிறது!


Comments

  1. 2.5 acre nilathukku evlo pammathu

    panchayathu thirppukku ivlo kalama

    ஒரு கோவில் திறப்பதற்காக


    மூடப்படும் ஒரு கோடி கல்விச்சாலைகள்

    sure////

    ReplyDelete
  2. Raviii,

    அயோத்தி-உடையப் போகும் நகர

    Yerkanave Babar-aal udaithathaal thaan marubadi உடையப் போகthu.

    ReplyDelete
  3. good one.. sensitive. sad to think how desperation for peace can take a person to wish for destruction...
    i was reading some other poems too. good style boss:-) pls visit my blog too.
    http://sunshinesignatures.blogspot.com/2010/08/blog-post.html

    ReplyDelete
  4. pinniravu yathiraiyin naduvil" mid night varaikum odi adi ela partha ipadithan piniravil thukam varamal kavithai varaum cool man.

    ReplyDelete

Post a Comment