கரைந்தோடும் நிழல்கள்


நிழல்களைப் பற்றிய நாட்குறிப்பொன்றைத் தேடுகிறேன்

என் நிழல்கள் பொய் சொல்லுவதில்லை

கவி பாடும் நிழல்கள்

வசை பாடும் நிழல்கள்

நழுவி வழிந்தோடும் நிழல்களென பலவற்றை உணர்ந்திருந்தேன்

நீரில் மூழ்குவது

காற்றில் கரைவது என எல்லா

சாத்தியங்களிலும் என்னைத் தோற்கடித்துவிட்டன

எதுவுமற்ற பிரபஞ்சத்தில் யாரைத் தேடுவெதென

தடுமாறிய போது சாவின் நிழலை அறிந்தேன்

சொல்வதற்கு கூச்சமாயிருக்கிறது

என் நிழலும் என்னை நம்பவில்லை

பிக்ஸல்களின் கூட்டமைப்பில்

மற்றொருவன் மனசாட்சியை வாசிப்போரே

உங்களுக்குத் தெரியுமா என் நிழல்

எங்கே ஒளிந்திருக்கிறதென.

Comments

 1. Good one machi...!

  Its good that still your remember Aathmaa...! :)

  ReplyDelete
 2. வணக்கம் சார்.. கடைசியா மூடு வந்து பதிவப் போட்டதுக்கு..

  ReplyDelete
 3. unnudaiya nizhal irrukkum idam aathmavo..........

  aathmavin nizhalai enge theduvaiyo......

  senthil

  ReplyDelete
 4. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 5. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 6. Waiting for your next post in Aathma.!

  Ipadikku.,

  Aathma Rasifar Manram,

  Singapore Kilai. :)

  ReplyDelete
 7. Beautiful templateda...!

  Good selection...! :)

  ReplyDelete
 8. Next post...!

  Sorry for pressuraising..!

  But, I dont have options...!

  Othaa nee apparam maranthuruva.. :)

  ReplyDelete
 9. unudaiaya nizal engeyum sellvillai,unkoru thirumanam aagum pozhuthu athu velipadum , un koodave varum nee sagum varai un thunaiyaga,kavalai padathe sagothara.

  ReplyDelete

Post a Comment