பூக்களின் பைத்தியம்


வழியெங்கும் இறைந்து கிடக்கின்றன பூக்களின் மௌனம்

மௌனமா மரணமா தெரியவில்லை.

பூக்களுக்கு மயக்கம் கூடாது

வாசனைகளின் இயக்கம் பூக்களாலானது!

ஆம்பல் அனிச்சம் ரோஜா மல்லிகை செங்காந்தள்

சிலர் மிதிப்பர் சிலர் பூஜிப்பர்

சிலர் கவிதைகளாக்குவர்

நான் மௌனிக்கிறேன்

எனக்கொருமுறை பைத்தியம் பிடித்திருந்த போது

பூக்களே வைத்தியம் பார்த்தன.

தன் வரலாறு கூறி என்னை உயிர்ப்பித்தன

பிரபஞ்சம் ஒளியாலானது என்பர்

சிலர் இழைகளாலானது என்பர்

அவ்வளவும் பூக்களாயிருந்தால் எத்தனை ரம்யமாயிருக்கும்

பூக்கள் என் பிரஜைகள்

அதனாலேயே நான் கடவுளுமானேன்.

பின்பு காரணமில்லாமல் நான் பூக்களை ஒதுக்கியபோது

என் ஸ்னேகிதத்தை துண்டித்து

என்னை உடைத்துப் போட்டன பூக்கள்.

இனி விமோட்சனமில்லை

நான் பூக்களின் பைத்தியமானேன்!

Comments

 1. பூக்கள் என் பிரஜைகள்

  அதனாலேயே நான் கடவுளுமானேன்.///
  I am proud to be your friend machaan...This piece of work is called Classic..and this is real classic... pinra machaan... :)

  ReplyDelete
 2. சூப்பர்.. பாஸ்! நல்லா புரியும்படி எழுதியத்துக்கு..

  ReplyDelete
 3. மிக அருமை

  இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

  ReplyDelete
 4. 36th time I am reading this.busla pogumpothu intha varigal enna marupadiyum marupdiyum yosichu parthu rasika vekkuthu....Its really making me happy machaan...adimanasulernthu solren...nalla eluthuruda....aacharyapada vekkara...neraya eluthu..velaya vitutu kooda nee eluthalam....you are a professional writer...

  ReplyDelete
 5. HA HA HA....vengayam...sothula man alli potudathada!

  ReplyDelete
 6. un kavithaikku pushpanjali
  seluthuvathu naan illai
  pookkal

  ReplyDelete
 7. நான் பூக்களின் பைத்தியமானேன்!//// நாப்பத்தி எட்டாவது தடவ படிக்கறேன்...

  ReplyDelete
 8. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete
 9. நீ பூக்களால் பைத்தியம் ஆனாய்
  நானும் பைத்தியம் தான் பூக்கள் மீது அல்ல
  உன் எழுத்துகள் மீது ......

  ReplyDelete
 10. மிகவும் அருமையான சிந்தனை . அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 11. machi kandipa unkku puthusa launch panna SULPITAC OD 400 MG BID dossage kuduthe aaganum ,un pookalin paithiyam thelia,anyway lines r super,keep it up poo paithyam.

  ReplyDelete

Post a Comment