நெடுஞ்சாலைகள்சூரியனின் உக்கிரத்தையும் அந்தியின் நளினத்தையும்

சுமந்தபடி அவை சோர்வோடிருக்கின்றன

ஜன்னல் வழி பார்வைகளால் அலுத்துப் போயிருக்கின்றன

வெயிலும் மழையும் வேதனைகளையே தருகிறது

யார் அழித்தார் அதன் மூலக்கூறுகளை ?

வெறுமையும் வெறுப்பும் அதன் பாளங்களில்

பயணிப்போர் கதை கேட்பதில்லை

நிறுத்தியவர் தன் சிறுநீர் தவிர

வேறெதுவும் ஊற்றுவதில்லை

ரோஜாக்களூம் மல்லிகைகளும் இங்கு

நசுங்கியபடியே தான் பூக்கின்றன

பின்னிரவின் கர்வத்துக்கும் அதிகாலை பரவசத்துக்கும்

நடுவில் நடுங்கியபடி

எல்லோரையும் வழியனுப்பிவிட்டு எனக்காகக்

காத்திருக்கின்றன

சில அர்த்தமற்ற நெடுஞ்சாலைகள்

Comments

Post a Comment