ஒரு பிரம்மாண்டக் கவிதையின் முதல் வரி

ஈழத்தின் சேதங்கள் பற்றியும்

உலகமயமாக்கலின் நாசங்கள் பற்றியும்

நிறவெறி பற்றியும் நீர்ப்பங்கீடு பற்றியும்

துருவங்களின் உஷ்ணம் பற்றியும்

சே பற்றியும் செங்கொடி பற்றியும்

எழுத முற்பட்ட ஒரு பிரம்மாண்டக் கவிதையின்

முதல் வரி முடிக்கும் முன்

வீட்டு வாசலில் சண்முகம் கத்தினான்

"நம்ம ஏரியாவுல இன்னிக்கு டி.வி குடுக்கிறாங்களாம்"

சில மணி நேரம் வீடு தாழிடப்பட்டிருந்தது.

மீண்டும் கவிதை தொடங்கப்பட்டது!

Comments

 1. சில மணி நேரம் வீடு தாழிடப்பட்டிருந்தது.

  மீண்டும் கவிதை தொடங்கப்பட்டது!
  ////////////////////////////////////
  கவிதைல காதலிக்கலாம்...!!!!
  மச்சி....,
  செருப்பாளையும் அடிக்கலாமாடா...???

  ReplyDelete

Post a Comment