கி.பி.2010மீண்டும் சூரியன் உதயமானது!

கல்விக்கட்டணங்கள் உயர்ந்தன

மழைக்கு சாலைகள் இடம் மாறின

சாமியார் கைதானார்

ரயில் பெட்டிகள் தகர்க்கப்பட்டன.

பெட்ரோல் விலையால் பர்ஸ் கிழிந்தது

பாரளுமன்றத்தில் அமளி செய்தனர்

ஒரு நடிகன் முதல்வராக ஆயத்தமானான்

வெள்ளத்திலும் பஞ்சத்திலும் இறந்தனர்

ஈழத்தில் கதறினர்

டாஸ்மாக்கில் சாதனை முறியடிக்கப்பட்டது

கூட்டணிகள் உடைந்தன: உருவாகின

நதிகளுக்காகவும் அணைகளுக்காகவும்

பேச்சுவார்த்தை நடத்தினர்: பேசாமலே திரும்பினர்

தனக்குத் தானே பாராட்டு விழா நடத்தினர்

பாராட்ட யாருமில்லையானால் ஓய்வெடுத்தனர்

சில கோஷங்கள் வலுப்பெற்றன

சில கோஷங்கள் நீர்த்துப் போயின

நாத்திகர்கள் கூட்டம் போட்டனர்:

தியேட்டர்களிலும் கோயில்களிலும் கூட்டம் முண்டியடித்தது

இடைத்தேர்தலுக்காக ஏங்கினர்

மீண்டும் ஒரு காலண்டர்: மீண்டும் ஒரு வருஷம்!

Comments

 1. meendum oru murai kurinom
  happy new year

  ReplyDelete
 2. gud post

  regards
  ram

  www.hayyram.blogspot.com

  ReplyDelete
 3. @மீண்டும் ஒரு காலண்டர்: மீண்டும் ஒரு வருஷம்! ...////
  Classic Buddy...!...
  Nangal pathinigal enru Sarathkumar thalaimayil vibacharigalin innoru koottam...Nadigar sangathil...

  ReplyDelete
 4. அருமையான படைப்பு, சமுதாயத்தின் தாக்கம் நன்றாக வெளிவந்துள்ளது.
  பாராட்டுக்கள்
  ராமகிருஷ்ணன் த

  ReplyDelete
 5. நன்றி ராமகிருஷ்ணன்

  ReplyDelete

Post a Comment