நீரினுள் பிரதியெடுக்கும் மழை!என்னை நீரினுள் பிரதியெடுக்கிறது மழை

மழையினுள் மறைகின்றது இசை

இசையின் தொடர்ச்சியாய் மீண்டும் மழை

எங்கும் மழை எப்பொழுதும் மழை

மழையின் சரிவில் மழை

மழையின் தொடர்ச்சியிலும் மழை

மழையின் ஆயுள் மழைக்குத் தெரியுமா?

குழந்தை மழையின் அதிர்வில்

பேய் மழையின் பிரவாகம்

பிரவாகத்தின் முடிவில் மீண்டும் மழை!

மழையின் சப்தம் மழையே அறியும்.

மழைக்கு விவஸ்தை இருக்குமா?

தேங்கிய மழைக்கு ஒரு பெயர்!

என் வீட்டு மழைக்கு வேறு பெயர்.

யாருக்கெல்லாம் வேண்டும் மழை?

பெய்த மழையின் சுவடுகள் நேற்றே விதிக்கப்பட்டவை

மழைக்கும் மழைக்கிறதாதலால்

என்னோடு அலைகிறது மழை

பெய்விப்பவனின் சூட்சுமம் தேடி


(யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தது!)

Comments

Post a Comment